நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சியினர் மற்றும் வருவாய்துறையினர் முக கவசம் அணியாமல் பேருந்து மற்றும் சாலைகளில் சென்றுனவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் வெளியே வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இல்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறி பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்க பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களிடம் அபராதம் விதித்து வரும் நிலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சியினர் மற்றும் வருவாய்த்துறையினர் முக கவசம் அணியாமல் பேருந்து மற்றும் சாலைகளில் சென்றவர்களுக்கு முககவசம் வழங்கி இனி வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லை என்றால் அபராதம் வசூல் செய்யப்படும் முகக் கவசம் அணிந்தால் கொரோனா வராமல் தடுக்கலாம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..