தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ் புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே வசிப்பவர் திருநாவுக்கரசு (35).இவர் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான ஆம்பூர் பாளையம் சாலையில் உள்ள கட்டண கழிப்பிடத்தை ஒப்பந்தத்திற்கு எடுத்து பராமரிக்கும் வேலையைச் செய்து வருகிறார்.
தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் இவருக்கு திருமணமாகி ஜோதிமணி (28) என்ற மனைவியும் 5 வயதில் ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.மேலும் தற்போது ஜோதிமணி கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சுமார் 8 மணியளவில் கழிவறைக்கு சென்றவர்கள் அப்பகுதியில் திருநாவுக்கரசு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது இருந்தது உறுதி செய்யப்பட்டது.
திருநாவுக்கரசை கொலை செய்தவர்கள் யார்? ஏன் கொலை செய்தார்கள்? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு உடனே இருந்து வந்த ராஜேஷிடம் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.