ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும் (சாம்பியன் ஷிப்) பெற்றுள்ளனர்,
இப்போட்டியில்
பூவிதா, ஜீவா, மாலதி,
ஆகியோர் தங்கம் வென்று தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்,
இதே போட்டியில் நர்மதா கீர்த்திகா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுள்ளனர் ,
காவியா,
வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்,இதுபோன்று சென்னையில் நடைபெற்ற ஆண்களுக்கான இளையோர் போட்டியில் கலந்துகொண்டு ஜெயக்குமார், லட்சுமணன்,சப் ஜூனியர் பிரிவில் ஹரிணி ஸ்ரீகாந்த் ,மணிகண்டன், திருச்செல்வம், ஆனந்த், நவீன், ஆகியோர் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளனர்
இவர்கள் அனைவரையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்கள் கூறினார்கள் உடன் புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் மற்றும் செயலாளர்,
சேது.கார்த்திகேயன்
பொருளாளர்,
முனைவர்.ரமேஷ்,
மற்றும்
அத்தலட் பயிற்சியாளர் செந்தில் கணேஷ் குத்துச் சண்டைப் பயிற்சியாளர்கள் பார்த்திபன் ,
காதர் பாட்ஷா, ஆகியோர் உடன் இருந்தனர்..!