தூத்துக்குடி அருகே மன உளைச்சலில் ஜெயப்பிரகாஷ் சார்பதிவாளர் தற்கொலை

188

தூத்துக்குடி சார்பதிவாளராக பணியாற்றிவந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கடந்த வருடம் 26/07/2022 அன்று பத்திரப்பதிவுத்துறையால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

PACL நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ் சஸ்பென்ஷன் நடக்கிறது.

சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடக்கிறது.
தவறு எதுவும் நடக்கவில்லை என்று நிரூபணம் ஆகிறது..

ஆனாலும்,சஸ்பென்ஷனை பதிவுத்துறை ரத்து செய்யவில்லை..
கிட்டதட்ட 17 மாதங்கள் ஓடிவிட்டது..
இதற்கிடையில்,
4 முறை அரசுத்துறை செயலாளரை சந்தித்து சார்பதிவாளர் ஜெயப்பிரகாஷ் முறையிட்டுள்ளார்.

சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டுமென,
சார்பதிவாளர் ஜெயப்பிரகாஷ்,
பதிவுத்துறை தலைவரை 7 முறை நேரில் சந்தித்து,கோரிக்கை வைத்துள்ளார்

எதுவும் நடக்கவில்லை…

செய்யாத தவறுக்கு பணி நீக்கத்தில் உள்ளேன். விசாரணை அறிக்கை நிரூபணம் ஆகவில்லை என அறிக்கை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திற்கு சென்று 8 மாதங்களுக்கு நிறைவடைந்து விட்டது.
ஆனாலும் நிவாரணம் இல்லையென குடும்ப உறுப்பினர்களிடம் ஜெயப்பிரகாஷ் புலம்பி வந்துள்ளார்

இந்நிலையில்,
கடுமையான மன அழுத்தம் உளைச்சலில் இருந்த தூத்துக்குடி சார்பதிவாளர் ஜெயப்பிரகாஷ் நேற்று தற்கொலை செய்து உயிரிழந்துவிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here