திருச்சி :
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 67 பேர் துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்தினார்.