சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தேனி மாவட்டம் பெரிய குளம் பகுதியில் ‘ஓ.பி.எஸ்.தான் அடுத்த முதல்வர்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தனக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழிக்க துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
துணை முதல்வருடனான ஆலோசனைக்குப்பின் அமைச்சர்கள் முதலமைச்சர் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறும் நிலையில் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.