தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வெளியாகுமா?

888

தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வருகிறதா, இல்லையா என்பது தான் அனைவரும் கேட்கும் கேள்வி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை.

தமிழகத்தில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. விஜய்யின் பிகில் படம் சில தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த தீபாவளிக்கு மாஸ்டர் ரிலீஸாக வாய்ப்பே இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் படத்தை வெளியிடும் திட்டம் வைத்திருக்கிறார்கள்

கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மாஸ்டரை வெளியிட முடியவில்லை எனில் பொங்கலுக்கும் விஜய் படத்தை பார்க்க முடியாதா. இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மாஸ்டர் டீஸரை வெளியிடுமாறு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நவம்பர் 7ம் தேதி உலக நாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமல் ஹாசன் 232 பட டைட்டில் டீஸர் வெளியாகும் என்று லோகேஷ் ட்வீட் செய்தார். அதை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் அப்பேட் கேட்டார். அவரின் கமெண்ட்டை பார்த்த லோகேஷ் கனகராஜ் மிக விரைவில் என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வெளியாகிறது என்று ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மாஸ்டர் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் எல்லாம் தயாராக இருக்கிறது, ஆனால் ரிலீஸ் திட்டம் குறித்து தெளிவு இல்லாத நேரத்தில் அதை வெளியிட முடியாது என்று லோகேஷ் கனகராஜ் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

தீபாவளிக்கு மாஸ்டர் டீஸரை பார்த்தே ஆக வேண்டும் என்று இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் அவர்களின் ஆசையை படக்குழு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நியூஸ் நவ் தமிழ்நாடு செய்திகளுக்காக
ச.பவித்ர குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here