புதுக்கோட்டை மாவட்ட திருமயம் தாலுகா கே. புதுப்பட்டி சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன..
அதை பகுதியில் அருகே அருகே இரண்டு கடைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ளது.. ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கும் போது கடந்த ஆட்சியில் வேகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.. மற்றொரு கடையான
காரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை எண் 6646 குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் அதை அகற்றிட கோரிக்கை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இது தொடர்பாக அந்த பொதுமக்கள் கூறுகையில் மதுக்கடைக்கு மது அருந்த வரும் நபர்கள், சாலையில் போதையில் தள்ளாடியபடி நடந்து செல்கின்றனர் எனவும்
அரசுபள்ளிக்கூடம் அருகே உள்ளதால் பள்ளி கூடம் திறப்பதற்கு முன் அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது..
மேலும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் கேணி, கோவில் அருகே உள்ளதால் மதுபிரியர்கள் ஆங்காங்கே திரிவாதால் சற்று அச்சம் தெரிவித்துள்ளனர்..
உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..