திருமயம் அருகே கார்கள் மோதல் புதுகை பெண் நீதிபதி படுகாயம்!

365

திருமயம் அருகே கார்கள் மோதல் புதுகை பெண் நீதிபதி படுகாயம்.
திருமயம்.ஆக.19____
புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிபதி ஜெயக்குமாரி ஐமிரத்னா(38). இவர் நேற்று பணி முடிந்து இரவு 7 மணி அளவில் காரில் மதுரை சென்றார். காரை அவரது அரசு டிரைவர் வரதராஜன்(35)ஓட்டினார். திருமயம் அருகே சமத்துவபுரம்
( புதுக்கோர்ட்) பக்கம் சென்ற போது மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் திடீரென பஞ்சர் ஆகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நீதிபதியின் காரில் பயங் கரமாக மோதியது. இந்த விபத்தில் நீதிபதி ஜெயக்குமாரி ஜமிரத்னா,அவரது டிரைவர் வரதராஜன் ஆகியோர் படுகாயமடைந்தனர். சரியாக இரவு 7.30 மணிக்கு சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்த திருமயம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து பட்டுக்கோட்டை கார்டிரைவர் துரை. வெங் கடேசன் (34) (பஞ்சரான காரின் டிரைவர்) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடைசி செய்தி. தீவிர சிகிச்சை அளிக்க வேண்டி நீதிபதி ஜெயக்குமாரி,அவரது டிரைவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here