திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராக பணிப்புரிந்த டி.எம்.நவாப்ஜான் என்பவர் 1972 ஆம் ஆண்டு இந்திய பல்கலை கழகம் இந்திய கைப்பந்து அணிக்காக இத்தாலியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார்.
மேலும் 1975 முதல் 1981வரை தமிழ்நாடு கைப்பந்து அணி வீரராகவும் மற்றும் வட ஆற்காடு மாவட்ட கைப்பந்து அணிக்கு 45 வருடங்களாக பயிற்சியாளராக இருந்து சுமார் 1000த்திற்கு மேற்பட்ட கைப்பந்து வீரர்களை உருவாக்கினார்.
அவர்கள் தற்போது பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு பணிகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னாள் இந்திய கைப்பந்து ஆட்டம் வீரர் டி.எம்.நவாப்ஜான் கடந்த சில தினங்களுக்கு சொந்த ஊரான திருப்பத்தூரில் உடல் நலம் குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து இன்று திருப்பத்தூர் மாவட்ட கைப்பந்து கழகம் மாவட்ட தலைவர் S.P. சீனிவாசன் தலைமையில் இரங்கல் கூட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டு நவாப்ஜான் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி புகழாரம் சூட்டினார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கைப்பந்து வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்த இரங்கல் கூட்டத்தில் மாவட்ட கைப்பந்து கழக பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான கைப்பந்து வீரர்கள் உடன் இருந்தனர்.
