திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் லாரி ஓட்டுனர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

559

திருச்சி முசிறி தண்டல பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (37) லாரி ஓட்டுனர். இவரது மனைவி சுதா (35) இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவர் பெரியசாமியின் மனைவி சுதாவை கடத்தி சென்றதாக கூறி முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அலுவலகம் முன்பு திடீரென குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிப்பதற்காக நின்றுகொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் அருணாச்சலம் ஆகியோர் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை தள்ளிவிட்டு அந்த குடும்பத்தை காப்பாற்றினர். இச்சம்பவம் ஆட்சியரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here