திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது ஆலங்காயம் ஒன்றியம் கிரி சமுத்திரம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 பேர் திரண்டு வரவேற்றனர் இதேபோல் அங்கு திரண்ட ஏராளமான பெண்கள் துரைமுருகனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர் பின்னால் துரைமுருகனுக்கு துணை அமைப்பாளர் ஞானவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பட்டு வேட்டியை வழங்கினார் இதில் ஆலங்காயம் ஒன்றிய பிரதிநிதி பாரி கந்திலி ஒன்றிய பிரதிநிதி காந்தி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அன்பழகன் ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சி பிரதிநிதி மெக்கானிக் நாகராஜன் ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர் நிலவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்