சேலத்தில் வரும் டிசம்பர் 17ந் தேதி நடைபெற உள்ள 2வது இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி தொடங்க உள்ளது. இதனை நாளை (நவ., 15) காலை 11 மணி அளவில் திமுக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் 8647 கிலோ மீட்டர் பயணித்து சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.