தாய் தந்தை இழந்த சிறுவர்கள்! அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

400

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீமிசல் அருகேயுள்ள செய்யானம் கிராமத்தை சார்ந்தவர் சந்திர சேகரன். இவர் முடிதிருத்தும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு கடந்த 18 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் ஹரிஹரன் (வயது 16), அஜய் (வயது 14), அஜித் குமார் (வயது 13), அகிலன் (வயது 8) என நான்கு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2016 ஆம் வருடம் வனிதா உடல்நலக்குறைவால் உயிரிழக்கவே, தாயை இழந்த சிறுவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சந்திரசேகரனும் மனைவியை இழந்த சோகத்தில் மன நோயாளியாக, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார்.

தாய், தந்தையை இழந்த 4 சிறுவர்களும் பாட்டி புஷ்பமின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து கிடைத்த நேர உணவுகளை உண்டு வாழ்க்கையை பசியுடனும், வறுமையுடனும் நகர்த்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு அரசு உதவி செய்யக்கூறி 4 சிறுவர்களும் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உதவி செய்யக்கூறி மனு கொடுக்கவே, மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கவிதா ராமு அரசு உதவி செய்யும் என வாக்குறுதி அளித்தார். சிறார்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய முன்வர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here