தற்கொலை எதற்கும் தீர்வல்ல… குழந்தைகளை நல்வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் உள்ளது – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் அறிக்கை..

991

சென்னை

தற்கொலை எதற்கும் தீர்வல்ல… குழந்தைகளை நல்வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் உள்ளது – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் அறிக்கை..

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அவர்கள் மீதான தாக்குதல்கள் உடனே ஒடுக்கப்பட வேண்டியவை, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் இக்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 2 நாட்களுக்கு முன் ஆணையத்தின் சார்பில் தென்காசி #ThenkasiDistrict மாவட்டம் சங்கரன்கோவிலில் பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே எரித்துக் கொன்ற கொடூர சம்பவம்,
கள்ளக்குறிச்சி #KallaKuruchiDistrict மாவட்டம் தியாகதுருகம் அருகே இட்லி சாப்பிட மறுத்த 5 வயது குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை துவங்கி சம்மந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு 15 நாட்களுக்குள் இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களில் நீட் தேர்வின் மேலுள்ள தேவையற்ற பயத்தால் அரியலூர் #AriyalurDistrict மாவட்டத்தை சேர்ந்த மாணவன் விக்னேஷ் மற்றும் மதுரையை #MaduraiDistrict சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நம் அனைவரையும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.

இவ்வுலகில் மரணம் என்பது எதற்கும், எவருக்கும் தீர்வாக அமையாது, குறிப்பாக பல சாதனைகளை படைக்கும் திறனையும், துணிவும், கடின உழைப்பும் நம் குழந்தை செல்வங்களுக்கு பிறப்பிலே உள்ளது அவர்களை நல்வழி நடத்தும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம் சமூகத்திற்கும் உள்ளது என்பதனை உணர்ந்து நம் ஒவ்வொருவரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பல வளங்கள், நலன்கள் உள்ள நமது பாரத நாட்டில் பல்வேறு வாய்ப்புகள் நம் குழந்தைகளுக்கு உள்ளது ஆகையால் அவர்களை ஒரு குறிப்பிட்ட தேர்வில் மட்டும் சுறுக்கிவிட வேண்டாம் என அனைவரையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு உரிய உளவியல் சார்ந்த பயிற்சிகளை மேலும் அதிகப்படுத்த ஆணையத்தின் சார்பில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்று தனது அறிக்கையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் rg. ஆனந்த் தெரிவித்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here