திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று மாலை அ.தி.மு.க.வைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் டி.ஜெயலட்சுமி தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, தலைமை இலக்கிய அணி துணைத் தலைவர் கவிச்சுடர் கவிதைபித்தன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் மற்றும் புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கே.ராமகிருஷ்ணன்,ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா ஆகியோர் உடனிருந்தனர்.