தமிழக பாஜக அரசியலில் புதிய திருப்பம் அரசியல் களம் காணும் மருத்துவர் டாக்டர். ஆர். ஜி. ஆனந்த !
தமிழகத்தில் இருந்து இரண்டு முறை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் பதவியை ராஜினாமா செய்தார்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க தீவிர அரசியலில் இறங்கக் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது..
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் இந்த முடிவு தீவிர அரசியலில் குதிக்க திட்டம்தான் தெரிகிறது!
இந்தியாவில் தமிழகம் மட்டுமின்றி 250 நகர பகுதிகளில் மேல் பயணித்து குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய அரசு அதிகாரிகள் பாராட்டை பெற்றவர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த்!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மங்கி பாத் திட்டத்தை துரிதமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்!
குறிப்பாக தமிழகத்தில் சிதம்பரம் தீட்சிதர் இரட்டை விரல் பரிசோதனை விவகாரம், திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் சிறார்கள் ஓடி சென்ற விவகாரம், இன்னும் பல குறிப்பிட்ட குழந்தைகள் நலன்கள் கருதி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டவர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது!
தென் தமிழகத்தில் நன்கு பரிச்சயமான டாக்டர். ஆர். ஜி. ஆனந்த அரசியல் திட்டம் தமிழக பாஜகவிற்கு கூடுதல் பலமாக இருக்கும் !