தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தமிழக நிதியமைச்சர்

493

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது,அடுத்த ஆண்டு வரவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த திருந்திய வரவு செலவு பட்ஜெட் அமையும்

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது

நிதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முனைப்புடன் கையாள வழக்கு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும் .இதை கண்காணிக்க ஒய்வு பெற்ற நீதிபதி மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.

பெட்ரோல்,டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது

2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டுள்ளது என்பதை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது

ஒன்றிய அரசிடம் இருந்து GST நிலுவைத்தொகையை பெற நிபுணர் குழு அமைக்கப்படும்

20-21ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது. மாநிலங்களின் பங்கு கடுமையாகச் சரிந்துள்ளது. ஆகவே எரிபொருள் மீதான விலையைக் குறைக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே இருக்கிறது.

1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும் .

தமிழ்நாட்டில் அரசு நிலங்கள் மேலாண்மைக்கு பொது அமைப்பு .

தொழில் நுட்ப புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்

அரசின் உட்தணிக்கை முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்

தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்

“தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு; தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது”

சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

முக்கியமான தமிழ் படைப்புகள் பிறமொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்படும்

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும்.

கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

காவல்துறைக்கு ரூ 8930 கோடி ஒதுக்கீடு

காவல் துறையில் 16 ஆயிரம் காலி இடங்கள் நிரப்படும்.

“பேரிடர் மேலாண்மையில் எந்த சூழலையும் சந்திக்க தமிழ்நாடு தயாராக உள்ளது; பேரிடர் மேலாண்மைக்காக கூடுதல் தொகை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்”

தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்.

சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ம் தேதி 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.

விபத்துகளின் எண்ணிக்கை குறைக்க ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம்

போக்குவரத்து ஆணையரகம் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரமாக பெயர் மாற்றம்

பேரிடர் மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1360 கோடி போதுமானதாக இல்லை

போக்குவரத்து ஆணையரகம் , போக்குவரத்து சாலை பாதுகாப்பு ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும்

அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்த கட்டிடம்

நீதித்துறை – 1713 கோடி ஒதுக்கீடு

அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டப்படும்

ரூ. 111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்

தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்
மீன்வளத்துறைக்கு ரூ. 303 கோடி ஒதுக்கீடு

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்

தமிழக பசுமை இயக்கம் ஏற்ப்படுத்தபட்டு .மன்சார் மரங்கள் நடப்படும்

6 இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்க 6.25 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்

பசுமை பரப்பளவை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம்

மன் சார்ந்த மரங்களை அடுத்த 10 ஆண்டுகள் பெரிய மரம் நடும் திட்டம்

500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுசூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்

இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ,தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நிறுவப்படும்.

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here