தமிழகம் முழுவதும் சுங்கசாவடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகிம்சை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி தலைமை தாங்கினார். போராட்டத்தில், கடந்த 5 மாதங்களாக கொரோனா என்ற கொடிய நோயினால் நாட்டு மக்கள் அதிகமாக நோய் வாய்ப்பட்டும், இன்னுயிர் ஈந்தும் இந்த வேலையில் மக்கள் கல்வி மற்றும் வேலையில்லாமல் பண நெருக்கடியால், வீழ்ந்து கிடக்கும் நேரத்தில் மக்களிடம் கொள்ளையடிக்கும நோக்கத்தில் மத்திய அரசு சுங்க சவாடி என்ற பெயரில் சுங்க கட்டண வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. பிற மாநிலங்களில் சாலை பராமரிப்பு என்ற பெயரில் ரூ.5 மட்டுமே வசூலித்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் சிறிய வாகனத்திற்கு கூட ரூ.100க்கு மேல் வசூல் செய்து வருகிறார்கள். இதனால் சுங்க சாவடியை முழுமையாக அகற்ற கோரி அகிம்சை போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் உஞ்சல் சிங், ஒன்றிய செயலாளர்கள் பாரிவேந்தன், முருகேசன், குமார், உதயகுமார், மாவட்ட துணைத் தலைவர் தொம்மை குருஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்பாண்டி, மாணவரணி செயலாளர் ஆகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் மோகன்ராஜ், இளம்புயல் பாசறை மாவட்ட செயலாளர் கசாலி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன்பின் மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி மனு அளித்தார்.
இதுபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி முத்தையாபுரம் பகுதிகளில் உள்ள நீண்ட காலமாக எரியாத தெருவிளக்குகளில் எரியவைக்கக் கோரியும், தமிழகம் முழுவதும் சுங்க சவாடிகளை அகற்றக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.