தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல ஏக்கர் நெற்பயிர்கள் வாழை உள்ளிட்டவை நீரில் மூழ்கி நாசமானது. கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் குறைந்து உள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
29.01.2021 முதல் 31.01.2021 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் பனி மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.