தமிழகத்தில் கடந்த 20 நாள்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 349 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தற்போது மருத்துவமனைகளில் 268 போ் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
அதன்படி, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.