தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது! முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்!

146

தமிழ்நாட்டின் புகழ்மிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்திகள் பேரதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பை பலப்படுத்தி 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி மாணவர் நலன் காத்தது மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்த அண்ணன் Edappadi K. Palaniswami தலைமையிலான கழக அரசு.

ஆனால், இன்றைக்கு பெருமைவாய்ந்த நம் தமிழகத்து மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமே ரத்தாகும் அளவுக்கு அலட்சியமாக இருந்திருக்கிறது இந்த விடியா அரசு.

மருத்துவர் கனவோடு செய்வதறியாது திகைத்து நிற்கும் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பதில் சொல்லியாக வேண்டிய முழு பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

உடனடியாக, ‘தலையும் புரியாமல் வாலும் தெரியாமல் இருக்கும் மருத்துவத் துறையையும் அதன் அங்கீகாரத்தையும் மீட்டெடுத்து மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here