இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவள்ளூா், நீலகிரி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.