சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் 65 இடங்களுக்கு நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றம், 65 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைய கூட்டத்தில் பீகார் சட்டமன்ற தேர்தல், 65 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் தேர்தல், 65 தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. நடப்பு பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ல் முடிவதால் அதற்குள் தேர்தல் நடத்த ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.