தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10 வரை கட்டணம் உயர்கிறது.. எந்த எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு முழு விவரம் உள்ளே

1003

ஏற்கனவே ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது.

கட்டண உயர்வு அமலுக்கு வரும் அந்த 21 சுங்கச்சாவடிகள் எவை?

கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தருமபுரி), விஜயமங்கலம் (குமாரபாளையம்), எலியார்பதி (மதுரை), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), ராசம்பாளையம் (நாமக்கல்), ஓமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுப்பட்டி, வாழவந்தான்கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), திருப்பராயத்துறை, பொன்னம்பலப்பட்டி (திருச்சி), திருமாந்துறை (விழுப்புரம்), விக்கிரவாண்டி, செங்குறிச்சி, மொரட்டாண்டி (விழுப்புரம்) ஆகிய 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here