வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்குவதால், தமிழகத்துக்கு இன்று அதிகன மழைக்கான ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய, 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மிக கன மழை பெய்யும்.
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய, 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.