புதுக்கோட்டை தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் தனியார் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களுக்குள் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரை வெளியிட்டு விழா, இதில் 43 பள்ளிகளைச் சேர்ந்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் இடங்களைப் பிடித்த 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரை போட்டி நடைபெற்றது. மொத்தம் உள்ள 107 பள்ளிகளுக்கு ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் 43 பள்ளிகளைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த கட்டுரைகளை 100 பக்கத்திற்கு எழுதி சமர்ப்பித்தனர். பின்னர் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் பத்து மாணவர்களின் ஆய்வு கட்டுரை போட்டிக்கு எடுத்துக் கொல்லப்பட்டு தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அந்தப் பத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் சிறந்த ஆய்வு கட்டுரையை எழுதிய ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் உள்ள 43 பள்ளிகளில் 43 மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளில் பத்து கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு இன்று ஆய்வு கட்டுரை வெளியீட்டு விழா புதுக்கோட்டை அடுத்த சிவப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கட்டுரை வெளியீட்டு விழாவில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆய்வு கட்டுரைகளில் முதல் இடத்தை பிடித்த மாணவருக்கு பத்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசு 7,500 மூன்றாம் பரிசு 5000 என நிர்ணயிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ஏழு பேருக்கு தல 3000 விதம் பரிசுத் தொகையும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ஆண்டனி வழங்கினார். மேலும் இதில் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ஆண்டனி கூறுகையில்: தனியார் பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் இந்த ஆய்வு கட்டுரை போட்டி நடத்தப்பட்டு இன்று ஆய்வு கட்டுரை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் எந்த ஒரு தனியார் பள்ளியும் செயல்படவில்லை தனியார் பள்ளிகள் ஆய்வுக் உட்படுத்தப்பட்டு வருகிறது அடிப்படை வசதிகள் குறைபாடு உள்ளபள்ளிகளை அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.