திருவெண்ணைநல்லூர் அருகே தந்தையுடன் வயலுக்கு சென்ற பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துக்காராம். விவசாயியான இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் யஸ்வந்தை அழைத்துக்கொண்டு இன்று மாலை வயலுக்கு சென்றுள்ளார்.
அப்போது வயலில் அறுந்துகிடந்த மின் கம்பியை கவனிக்காமல் யஸ்வந்த மிதித்ததில் மின்சாரம் தாக்கி துக்கி வீசப்பட்டான். உடனடியாக யஸ்வந்தை மீட்ட துக்காராம் மற்றும் அங்கிருந்தவர்கள், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு யஸ்வந்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவெண்ணநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவ ஏனாதிமங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.