திருச்சி மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட கோட்டம் 3 அலுவலகத்தின் பணிகளுக்கு பல அதிகாரிகளை நியமனம் செய்யும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது
மாநகராட்சியில் தொட்டதுக்கு எல்லாம் பணம் கொட்டுவதால் பசையுள்ள பதவியை பெருவதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது
இந்நிலையில் கோட்டம் 3 க்கு A.R.O என்னும் உதவி வருவாய் ஆய்வாளர் பதவியை கோ அபிசேகபுரம் கோட்டத்தில் R.I ஆக இருந்த தாமோதரனுக்கு மேயர் அன்பழகன் பத்து லட்சத்திற்கு தாரை வார்த்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மாநகராட்சியில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களுக்கு வழங்க வேண்டிய உதவி வருவாய் ஆய்வாளர் பதவியை தகுதியே இல்லாத வருவாய் ஆய்வாளர் தாமோதரனுக்கு வழங்கப்பட்டிருப்பது சட்டப்படி குற்றம் என்கின்றனர் பதவி உயர்வால் பாதிக்கப்பட்டவர்கள்
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பில் கலெக்டர் மற்றும் ஆர்.ஐ ஆக இருந்த தாமோதரன் பதவியை முறைகேடாக பயன்படுத்தி பல லட்சங்களை குவித்து வைத்திருப்பதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ஆர்.ஐ.தாமோதரனுக்கு வழங்கப்பட்ட இந்த முறைகேடான பதவி உயர்வால் தகுதியானவர் பட்டியல்படி கண்காணிப்பாளர்பதவியில் இருந்து முதல் கடை நிலை ஊழியரின் பதவி வரை சுமார் 6 பேரின் பதவி உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்
மேலும் ஆர்.ஐ தாமோதரன் தான் பதவி ஓய்வு பெறும் வரை வருவாய் ஆய்வாளர் (சிறப்பு) பதவியில் மட்டுமே தொடர முடியும் ஆனால் பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மோசடியான பதவி நியமனத்திற்கு மேயர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பு கூறுகின்றனர்
இதே போன்று ஸ்ரீரங்கம் கோட்டத்தில் R.I ஆக பணிபுரியும் ராஜேந்திரன் என்பவரும் மேயர் அன்பழகனை “பலமாக” கவனித்து இருப்பதால் அவருக்கு பொன்மலை உதவி வருவாய் ஆய்வாளர் பதவி வழங்கும் வேலை வேகமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த பதவி உயர்வு நடைபெறுவதற்கு முன்னர் மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தினர் நகர்ப்புறத்துறையின் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்த போது பணி உயர்வு நியாயமாக நடக்கும் அதில் எந்த அரசியல் குறுக்கீடும் இருக்காது நம்பி செல்லுங்கள் அவர் உறுதி அளித்ததாகவும் கூறுகின்றனர்
எனவே துறையின் அமைச்சர் கே.என்.நேருவையே “ஓவர்லுக்” செய்து இந்த சட்டவிதி மீறிய பணி உயர்வை தகுதியில்லாத நபர்களுக்கு வழங்கி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்
நகர்ப்புறத்துறை அமைச்சர் நேருவின் சொந்த மாவட்டமான திருச்சியிலே இது போன்ற முறைகேடான பதவி உயர்வு நடந்தால் பின் அது தமிழகம் முழுவதும் நடந்து தவறான முன்னுதாரமாக அமைந்து விடும்
ஆகவே திருச்சி மாநகராட்சியில் தகுதியில்லாத நபர்களுக்கு வழங்கிய பதவி உயர்வை ரத்து செய்து தகுதியான நபர்களுக்கு பதவி உயர்வு வழங்க அமைச்சர் நேரு முன் வர வேண்டும் என்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் இது குறித்து சங்க நிர்வாகிகளிடம் கலந்து பேசி போராட்டத்தில் குதிக்கவும் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளனர்