தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் “டெஸ்ட் பர்ச்சேஸ்” என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின்படி முறையாக வரி செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர். இத்திட்டம் அதிகாரிகளின் லஞ்சம் ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டமாகும். எனவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான வணிகவரி உயர் அதிகாரியிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் இன்று புதுக்கோட்டை அமைந்துள்ள வணிகவரி அலுவலகத்தில் வணிகவரி இணை ஆணையரை வர்த்தக சங்க தலைவர் ஷாகுல் அமீது தலைமையில் மாவட்ட முழுவதிலும் வந்திருந்த 200க்கு மேற்பட்ட வணிகர்கள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். வணிக துறை இணை ஆணையரை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிகழ்வில் சாந்தம் சவரிமுத்து, யூனிவர்சல் பைப்ஸ் விக்னேஷ், அனிஸ் புக்ஸடால் இப்ராகிம் பாபு உட்பட்ட மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்..