டிசம்பர் 14ல் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?!..

449

திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 14ந்தேதி அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒரு முறை தமது அமைச்சரவையை மாற்றியமைத்தார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது,  போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்..

இந்நிலையில் வரும் 14ந்தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்  மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here