டார்கெட் என்ற பெயரில் தபால் துறை ஊழியர்களை நசுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE, FNPO உள்ளிட்ட சங்கங்களை உள்ளடக்கிய JCA தோழர்கள், தோழியர்களால் இன்று தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது..
இதில் புதுக்கோட்டை NFPE அஞ்சல் மூன்றின் செயலர் மற்றும் மாநில தலைவர், R.குமார் தலைமையேற்க , நாகராஜன், பாண்டித்துரை,சூரியபிரகாசம் ஹரிராமகிருஷ்ணன் உட்பட புதுக்கோட்டை கோட்டத்தின் பல்வேறு முக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு விண்ணை பிளக்கும் அளவிற்கு தொழிளாலர்களின் நலனுக்காக முழக்கமிட்டனர். நிகழ்வில் புதுக்கோட்டை கோட்டத்தின் பல்வேறு நிலையில் பணியாற்றும் அஞ்சல்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு நிர்வாகத்திற்கு எதிரான குரலெழுப்பினர்..