ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க., உறுப்பினர்கள், தங்களுடைய குடும்ப ஓட்டுகளை, பா.ஜ.,வுக்கு செலுத்தப் போகிறோம் என்கின்றனர். கட்சியின் தீவிர பற்றாளர்கள் கூட, இன்று மனம் மாறி உள்ளனர். அ.தி.மு.க. குறித்து யாரும் குறை சொன்னால், எதிர்த்து சண்டை போடக்கூடிய கட்சி தொண்டரை சந்தித்தேன்.
ராமர் கோவில் குறித்து பேசத் துவங்கி, தேர்தலில் வந்து நின்றது. ‘எதிர்த்து குரல் கொடுக்கும் அண்ணாமலையின் ரசிகனாகி விட்டேன். என் குடும்ப உறுப்பினர்களிடமும் சொல்லி விட்டேன். எங்களுடைய நான்கு ஓட்டும் பா.ஜ.வுக்குதான்’ என்று உரக்க சொன்னார், அந்த முரட்டு பக்தர். இவர் மட்டுமா என்று கேட்காதீர்கள். கடந்த 15 நாட்களுக்குள், பலர் இவ்வாறு பேசத் துவங்கி இருப்பதை பார்க்கிறேன்.
லோக்சபா தேர்தலில்,அ.தி.மு.க. வெற்றி பெறுமா என்ற சந்தேகம், எல்லார் மனதிலும் தோன்றிவிட்டது. சந்தேகம் பிறந்து விட்டால், யார் உங்களோடு கூட்டணி அமைக்க முன்வருவர்; யார் தேர்தலில் நிற்க துணிவர். பலர் வாய்ப்பு தேடி பா.ஜ.வுக்கு செல்ல துவங்கி விட மாட்டார்களா?
சில இடங்களில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட மாட்டீர்களா. அ.தி.மு.க. யாரை பிரதம வேட்பாளராக அறிவிக்கப்போகிறது என, கட்சியை நேசிக்கும் நடுநிலையாளர்கள் கேள்வி கேட்க துவங்கி உள்ளனர். இது தொண்டர்களின் குமுறல். தொண்டர்கள் உங்களை எதிர்க்க துவங்குவதற்குள், சுதாரித்துக் கொள்ளுங்கள்.
- செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
- https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29