சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிபாட்டு மதிப்பீட்டை திருத்தி கடந்தாண்டு மார்ச் மாதம் அரசு சுற்றறிக்கை வெளியிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று(04 ம் தேதி) விசாரணைக்கு வந்தது.
இதில் சட்டவிதிப்படி எந்த கலந்தாலோனையின்றி, கருத்து கேட்காமல் திருத்தி அமைக்கப்பட்டதாக வாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறியது, வழிகாட்டு மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
எனினும் கருத்து கேட்காமல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார்.