இது குறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் சங்க நிர்வாகி ஷிவானி வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை.

எங்கள் இளஞ்சூரியன் மாண்புமிகு சேப்பாக்கம் சட்டமன்ற உறுபினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகள் பிரட்சனை மற்றும் குறைகள் இருப்பின் அனைத்து சட்டமன்ற அலுவலகமும் திறந்திருக்கும் என கூறியுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, மற்றும் மூன்றாம் பாலினம் என்பதை முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் கூறிய திருநங்கை என்ற பெயரையே அழைப்போம் எனகூறிய திரு.உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கும், எங்கள் புதுகோட்டை சட்டமன்ற உறுபினர் மருத்துவர் வை.முத்துராஜா எப்போதுமே திருநங்கைகள் தேவை அறிந்து செயலாற்றகூடியவர் என்பதால் எங்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுபினர் வழியாக புதுக்கோட்டை திருநங்கைகளின் குறைகள் சரிசெய்யபடும் என பெருமையோடு கூறுகின்றோம். மீண்டும் இளஞ்சூரியன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருநங்கைகள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
இப்படிக்கு,
ரெ.ஷிவானி,
திருநங்கைகள் நல சங்கம்,
புதுக்கோட்டை.