சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக மேலும் 6 வழக்கறிஞர்கள் நியமனம்

435

ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் நடைமுறை முடியும் வரை, அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 17 பேரை தமிழக அரசு மே 13ஆம் தேதி தற்காலிக அடிப்படையில் நியமித்தது.

இந்நிலையில், மேலும் 6 வழக்கறிஞர்களை தமிழக அரசு நேற்று (மே 28) நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, வெங்கடேஸ்வரன், கே.வி.சஞ்சீவ்குமார், எஸ்.சூர்யா, ரிச்சர்ட்சன் வில்சன், அமிர்தா பூங்கொடி தினகரன், அகிலா ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here