
கட்சித் தலைமை எந்த முடிவுக்கும்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடனும் கழகப் பணி தொடர்ந்து ஆற்றுவேன் புதுக்கோட்டை திமுக மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் முத்துராஜா பதில் ..
புதுக்கோட்டையில் திமுக சார்பில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது..
புதுக்கோட்டை திமுகவைப் பொறுத்தவரையில் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கேகே செல்லபாண்டியன், வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா உள்ளிட்ட பலர் சீட் கேட்பதாக கூறப்படுகிறது…
இதில் டாக்டர் வை. முத்துராஜா தனது அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
டாக்டர் முத்துராஜாவை தற்போது தனியார் மருத்துவமனை ஒன்று நடத்தி வருகிறார்..
புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைநகரம் என்பதால் வேட்பாளர் தேர்வு மிக முக்கியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இருப்பினும் தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதியை தக்க வைக்க கட்சி தலைமை எடுக்கும் முடிவு இறுதியானது..
மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் முத்துராஜா பொறுத்தவரையில் கஜாபுயல் நிவாரண உதவிகள் தொடங்கி தற்போது கொரோனா கொடிய நோய் காலகட்டம் வரை புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து செய்து வருகிறார்.. அதே போல ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பு செலவுகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்..
அதே போல கோவில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை அளித்தல், கிரிக்கெட், கபடி விளையாட்டு போட்டிகளிலுக்கு பரிசுகள் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்..
புதுக்கோட்டை மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் முத்துராஜா விடம் நமது செய்தியாளர்கள் புதுக்கோட்டை தொகுதியில் தாங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு?
புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் இருப்பினும் திமுக தலைவர் தளபதி மு. க ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கும் கட்டுபட்டு தொடர்ந்து இன்முகத்துடன் கழகப் பணி ஆற்றுவேன் என்று கூறியுள்ளார் டாக்டர் வை முத்துராஜா..
திமுக கட்சி தலைமை புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்…