பல மோசடிக் குற்றங்களைக் கண்டறிவதற்கு சிம் கார்டு ஆதாரமாக உள்ளது.
சிம் கார்டு தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் போலி சிம் கார்டுகளைக் கண்டறியவும் தொலைதொடர்பு துறை புதிய கட்டுப்பாடுகளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
அதன்படி சிம் கார்டு வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் ‘பயோமெட்ரிக்’ விபரங்கள் சரிபார்ப்பது கட்டாயம். ‘டிஜிட்டல்’ கே.ஒய்.சி. செயல்முறை அமலுக்கு வருகிறது.
தொலைதொடர்பு வினியோகஸ்தர் பாயின்ட் ஆப் சேல் ஏஜென்ட் சிம் வினியோகஸ்தர் பதிவு செய்வது கட்டாயம் உள்ளிட்ட விதிமுறைகள் அமலாகவுள்ளன.
யாரிடமிருந்து யாருக்கு சிம் கார்டு சென்றது அவர்களுக்கு யார் பெற்று தந்தது உள்ளிட்ட முழு விபரமும் தெரிந்து விடும்.
தமிழ்நாடு மொபைல் கடை உரிமையாளர் சங்க மாநில பொருளாளர் ஈஸ்வரன் கூறுகையில் ”புதிய தொலைதொடர்பு மசோதா படி ஜன. 1 முதல் சிம் கார்டு வாங்குவது விற்பனை செய்யும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
”வெளி மாநிலத்தவர் சிம் கார்டு வாங்கும் போது உள்ளூரில் ஒருவரது ஆதார் அல்லது ஏதேனும் ஆதாரம் கட்டாயம் வழங்க வேண்டும்.
வெளி மாநிலத்தவருக்கு சிம் கார்டு விற்பனை செய்யும் போது கடை உரிமையாளர் தங்கள் விபரங்களையும் இணைக்க வேண்டும்.
ஒரே முகவரியில் இரண்டு சிம் கார்டு பெறும் முயற்சியை தடுக்க இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது” என்றார்.