சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இன்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது; பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது; தடுப்பூசி கொள்முதலை அதிகமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பரவல் அதிகமானால், ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேர ஊரடங்கு அறிவிப்பது குறித்தும், ஆலோசனையில் முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.