குழந்தைகள் சார்ந்த பிரச்சனை என்றால் உடனுக்குடன் இந்தியா முழுவதும் களத்தில் இறக்கும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் Dr.R.G.ஆனந்த்
உலகம் முழுவதும் குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு உள்ளது.. இந்தியாவைப் பொருத்தவரை பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி அவர்களின் சீரிய பணியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறிப்பாக இந்த ஆணையத்தின் சிறந்த முறையில் பணியாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார் தமிழகத்தை சேர்ந்த Dr.R.G.ஆனந்த்..
இவரின் பங்களிப்பு தமிழகத்திற்கு மிகையானது என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் இவர் மருத்துவர் என்பதால் இவர் சீரிய வேலைப்பாடுகளுக்கு கூடுதல் பலம்.. இவரின் கடந்த ஐந்தாண்டு பணிகளில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் குழந்தைகள் சார்ந்த நலனில் இவரின் செயல்பாடுகள், பல்வேறு துரித நடவடிக்கைகள் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
குறிப்பாக தற்போது கொரோனா பெருத்தோற்று காலத்தில் குழந்தைகளுக்கான வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான சிறப்பு முகாம் – நமோ கேர் 2021 மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான சிகிச்சை அளித்தல், மருத்துவ உதவிகள், உணவு பொருட்கள் வழங்கியும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்…
தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள
சென்னை, கே கே நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் வழக்கில் விசாரணையை துவங்கிய
பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து பள்ளி ஆசிரியர் திரு. ராஜகோபாலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை அனுப்புமாறு தமிழக காவல்துறை தலைவர் திரு. J.K.திரிபாதி அவர்களை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் இச்சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள Dr.R.G.ஆனந்த், அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, இதுபோன்ற குற்றங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்தும் மாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே போல நேற்று
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மகப்பேறு நல அரசு மருத்துவமனையின் ஒரு அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்ட செய்து அறிந்து நள்ளிரவில் உடனே மருத்துவமனை சென்ற தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் சென்று ஆய்வு மேற்கொண்டார்…
மொத்தம் 47 குழந்தைகள் அம்மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதனை குழந்தைகள் அனைவரையும் தனித்தனியாக நேரில் பார்வையிட்டும், மருத்துவ கல்வி இயக்குனர் திரு. நாராயண பாபு மற்றும் அம்மருத்துவமணையின் இயக்குனர் திருமதி. கண்மணி மற்றும் மருத்துவர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு உறுதி செய்த Dr.R.G.ஆனந்த் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், இதுபோன்ற விபத்துக்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்…