குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை உடனடியாக தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் Dr.R.G.ஆனந்த் மனு!

796

ஐந்து மாநிலங்களில் தேர்தல் ஆணையம் குழந்தைகளை தேர்தல் பரப்புரை செய்வதற்கு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்திடம் மனு..

Dr. R.G. Anand

குழந்தைகளின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தார்..

இந்த மனுவில்

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் திரு. பிரியங் காணூங்கோ அவர்கள் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதை உடனடியாக தடுக்க சம்மந்தப்பட்ட மாநில தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதல் பின்வருமாறு

  1. குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய பிற விஷயங்கள் அல்லது அவற்றின் இடைவிளைவுகள் குறித்த, குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான ஆணையத்திற்கான (CPCR) சட்டம் 2005-ன் வகைமுறைகளின்படி குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (NCPCR) அமைத்துருவாக்கப்பட்டது. சிபிசிஆர் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ், இந்த ஆணையத்திற்கு குறித்துரைக்கப்பட்ட செயல்பாடுகளுள் ஒன்று, குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்காக தற்போது அமலில் இருந்து வருகின்ற எந்தவொரு சட்டத்தின் கீழ் அல்லது அதனால் வழங்கப்பட்டுள்ள காப்பு அமைப்புகளை ஆய்வு செய்வது மற்றும் அதை மறுபரிசீலிணைக்கு உட்படுத்துவது மற்றும் அவைகளின் திறன்மிக்க அமலாக்கத்திற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது என்பதாகும்.
  2. குழந்தைகளது உரிமைகளை மீறுபவையாகவும் மற்றும் தரநிலையை குறைப்பதாகவும் இருக்கின்ற பல்வேறு வகைப்பட்ட செயல்பாடுகளில் தேர்தல் பிரச்சாரத்தின்போது குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து எண்ணற்ற புகார்களை கடந்த காலத்தில் மிகச்சமீப ஆண்டுகளில் இந்த ஆணையம் பெற்றிருக்கிறது. இத்தகைய புகார்களை கவனமாக பரிசீலித்ததற்குப் பிறகு கோஷமிடுதல், துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தல், தேர்தல் பரப்புரை ஆகியவற்றிற்காக தேர்லின்போது குழந்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பதை ஆணையம் கண்டறிந்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆணையம் ஒரு கண்டிப்பான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது; இவ்விஷயங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி இப்புகார்களை தனது செயலாட்சி வரம்பிற்கு உட்பட்டு, தீவிர கவனத்தில் கொண்டிருக்கிறது.
  3. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 2021 மார்ச் முதல், 2021 மே மாதங்கள் காலஅளவில் தேர்தல் செயல்முறையை இந்திய தேர்தல் ஆணையம் இப்போது அறிவிக்கை செய்திருக்கிறது. கடந்தகால தேர்தல்களில், தேர்தல் செயல்முறையின்போது அரசியல் கட்சிகளால் குழந்தைகளும், சிறார்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப்போல இந்த தேர்தலிலும் அவர்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை இந்த ஆணையம் கொண்டிருக்கிறது.
  4. ஆகவே, இதனை கருத்தில்கொண்டு, அதிகரித்து வரும் இந்த கவலையை நீங்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவேண்டும் மற்றும் எந்தவொரு வடிவத்திலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது குழந்தைகளைப் பயன்படுத்துவதை தடை செய்வதற்கான அறிவிப்பை நீங்கள் வெளியிட வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது. சுவரொட்டிகள் / துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது மற்றும் அவற்றை ஒட்டுவது அல்லது கோஷமிடுவது, பிரச்சார பேரணிகள், தேர்தல் கூட்டங்களில் பங்கேற்பது ஆகியவை தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்ற சில வழிமுறைகளாக இருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைளில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் பரிந்துரையாகும்.
  5. மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துகின்ற இத்தகைய துரதிருஷ்டமான மற்றும் தவறான நேர்வுகள் இனி நடக்காமல் தடுப்பதற்கு எதிர்கால தேர்தல்களுக்கு முன்மாதிரி நடத்தை நெறிமுறைகளில், தேர்தலின்போது குழந்தைகளை பயன்டுத்துவதை தடை செய்கின்ற அறிவுறுத்தல் இடம்பெறுமாறு செய்ய வேண்டும் என்றும் இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here