சிவகங்கை. ஜன.06
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் ஈரோடு மாவட்டம் சென்னி மலையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பிச்சை எடுத்து பிழைத்து வந்தார்.
இவர் கடந்த 4_ம் தேதி பாண்டியன் திரையரங்கு எதிரே உள்ள பொட்டலில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார் அவர் உடல் அருகே கல் ஒன்றும் கிடந்தது.
அவரது உடலை கைப்பற்றிய வடக்கு காவல்துறையினர் உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை செய்ததில்,
பாகம்பிரியாள் என்ற பெண் பிச்சைக்காரர் ஒருவர் அதே பாண்டியன் தியேட்டர் திரையரங்கம் அருகே பிச்சை எடுக்கும் போது ,
மூர்த்திக்கும் அந்த பெண்ணிற்கும் பிச்சை எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .
மூர்த்தி அந்தப் பெண்ணை இங்கு பிச்சை எடுக்க கூடாது என்று சத்தம் போட்டதாக தெரிய வருகிறது.
உடனடியாக அந்த பெண் அவரது கணவர் பூமிநாதனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
பூமிநாதன் நாராயணன் மற்றும் நண்பர் சரவணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மூர்த்தி தூங்கும் பொழுது கல்லால் தாக்கி உள்ளனர் இதில் மூர்த்தி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.
உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் துறையினர் பூமிநாதன் மற்றொரு பிச்சைக்காரரான நாராயணன் பேருந்து ஓட்டுனர் சரவணன் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்
ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.