காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் புகார்.!
காஞ்சிபுரம் நகராட்சியில், துப்புரவு பணி செய்வதற்கு, 139 நிரந்தர பணியாளர்கள், 350 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர்.
இதில், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் இன்னும் (ஆகஸ்ட் 23) சம்பளம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தற்காலிக துப்புரவு பணியாளர் ஒருவர் கூறியதாவது:தனியார் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதால், அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது.
மேலும், காலையில் ஒரு ஏரியா, மாலையில் ஒரு ஏரியாவில், வேலை செய்ய வேண்டும். இருந்தாலும், எங்கள் குடும்ப கஷ்டம் காரணமாக, குறைந்த ஊதியத்தில், இந்த வேலை செய்து வருகிறோம்.
மாதம் முதல் வாரத்தில் ஊதியம் கொடுத்தால் குடும்ப செலவுக்கு வசதியாக இருக்கும்.
தற்போது குடும்பத்தை நடத்த வெளியில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை, முதல் வாரத்தில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.