



புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசின் அறிவுறுத்தல் படி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கம்மாள் பழனிச்சாமி
தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்த விவாதம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் உள்பட பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இந்த கிராம சபை கூட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன், மேலாண்மை குழு தலைவர் வைதேகி, வட்டார கல்வி அலுவலர் செங்குட்டுவன், கால்நடை மருத்துவர் தினேஷ்குமார், புதுக்கோட்டை நகர் மன்ற உறுப்பினர்கள் லதா கருணாநிதி, ராஜாமுகமது, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் இபுராகிம் பாபு, கவிநாடு ஊராட்சி செயலர் ராஜேந்திரன், கிழக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி ராஜேந்திரன் உள்பட வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..