கள ஆய்வில் வேட்பாளர் நிலவரம்! புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டு!

978

பெயர் – ஜெ. பர்வேஸ்
(புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்)

படிப்பு – BA. LLB

போட்டியிடும் கட்சி – விஜய் மக்கள் இயக்கம் (சுயேச்சை)

போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள் – வார்டு கவுன்சிலர் பதவிக்கு வார்டு எண்- 4
விஸ்வாஸ் நகர்
வசந்தபுரி நகர்
நாய் பள்ளம்
வெங்கடேஷ்வரா நகர் – ஒரு (பகுதி)
அண்ணா நகர்
லெட்சுமி நகர்
மீனாட்சி நகர்

பலம் – வார்டு முழுவதும் செல்லும் இடம் எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அமோக வரவேற்பு ! விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் ஜெ. பர்வேஸ்.. கடந்த மூன்று ஆண்டுகளாக விலையில்லா விருந்தகம் தனது இல்லத்தில் அமைத்து காலை உணவு ஏழை எளிய மக்களுக்கு வழங்கியது, கஜா புயல் முதல் கொரோனா பெரும் தொற்று காலங்களில் தினமும் நிவாரண உதவிகளை வழங்கியது மாவட்ட முழுவதும் அறிந்த உண்மை. புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட வார்டில் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கை கொண்ட வார்டுகளில் இதுவும் ஒன்று.. இளைஞர்கள் புடைசூழ வலம் ஓட்டு கேட்டு வருவதால் வீட்டில் ஒருவர் விஜய் ரசிகர் இருப்பதால் கூடுதல் நம்பிக்கை உத்வேகத்துடன் களத்தில்..

வார்டில் உள்ள பொதுமக்கள் எதிர்பார்ப்பு – குடிநீர் வசதி தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், சாலை வசதி செய்து தர வேண்டும், தெரு விளக்குகள் வேண்டும், பாதாள சாக்கடை திட்டம் வேலையை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்றவை

வேட்பாளர் உறுதி மொழி- வெற்றி பெற்றவுடன் வீதிக்கு ஒரு விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி நியமனம் செய்து அவர்களுக்கு செல்போன் ஓன்று வழங்கி வீதிக்கு வீதி சுற்றி வலம் வந்து உடனுக்குடன் வார்டில் குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும், மேலும் குடிநீர் பிரச்சினை, தெரு விளக்குகள், சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி!

பலவீனம் – புதிதாக நகர்புற தேர்தல் களத்தில் இறங்கியுள்ள விஜய் மக்கள் இயக்கத்திற்கு சின்னம் வேட்பாளர்களுக்கு வேட்பாளர் மாறுவதால்

வெற்றி வாய்ப்பு – பிரகாசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here