கறம்பகுடியில் பினத்தை தூக்கி செல்லும் போது வெடி வெடித்து குடிசை எரிந்து சாம்பல்

845

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பினம் எடுத்து செல்லும் போது வெடி வெடித்து குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசம்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஆர்ச் ரோடு அருகே கோர தீ விபத்து . திருமணஞ்சேரி ஆர்ச் ரோடு அருகே பிரகதம்பாள் பாஸ்கர் என்பவர் குடிசை வீடு மயானத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது . இங்கு அதே பகுதியை சேர்ந்த வயது முதிர்வு காரணமாக இறந்த சுந்தரம் வயது 95 என்பவரது உடலை உடல் தகனம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றனர், அப்போது இறந்தவரின் உறவினர்கள் பட்டாசு வெடித்து உடல் தகனம் செய்ய எடுத்து செல்லும் போது பிரகதம்பாள் பாஸ்கர் என்பவரது குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டது . தகவலறிந்து கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் குடிசையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த உணவுப் பொருட்கள், துணி பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின . பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் ஊரடங்கு காலத்தில் இறுதி ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்த நபர் குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here