தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை கிராம சாலை கோட்டம் முறைகேடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழலில் முறைகேட்டில் சிக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்..
கரூரை தொடர்ந்து புதுக்கோட்டையில்
நெடுஞ்சாலை கிராம கோட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய படுவார்களா?
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் முறைகேடுகள் நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-22 மாநில நிதிக்குழு மானிய நிதியில் கிராம சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிராமங்களில் அமைக்கப்படும் இந்த சாலைகள் பூர்த்தி ஆவதற்குள் சுமார் 50 கோடிக்கு பில் போடப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை, நத்தம் பண்ணை, கைக்குறிச்சி பாப்பாவயல், விராலிமலை சிவாந்தியன்பட்டி, வலங்கைகொண்டவிடுதி, மேலுடையான்பட்டி, ஏம்பல், வயலோகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
அங்கு, புதிதாகச் சாலைகள் அமைக்கு பணியோ அல்லது சீரமைக்கும் பணியோ தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கையில், அதிகாரிகள் உதவியுடன் முழுமையாக போடாத சாலைக்கு கடந்த மார்ச் மாதம் 2021-2022 50 கோடி ரூபாய் அளவில் பில் எழுதி பணம் எடுக்கப்பட்டுள்ளது…
இதன் மூலம் புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கோட்டபொறியாளர்கள் பல கோடிக்கணக்கில் லஞ்சமாக கமிஷன் பெற்றுள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன..
இது சம்பந்தமாக புதுக்கோட்டை கிராம சாலை கோட்டம் திட்ட முறைகேடு சம்பந்தமாக நெடுஞ்சாலை அதிகாரி ஒருவருடன் பேசுகையில் இது என்ன தமிழகத்தில் புதிதாக நடைபெறுகிறுதா?
தமிழகம் முழுவதும் இதே நிலைதான் என்று தன்னிச்சையாக பதில் அளிக்கின்றனர்..
நெடுஞ்சாலை செயற்பொறியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா
என்று கேள்வி குறியாக உள்ளது..
மேலும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் கோரிக்கைகள் எழுந்துள்ளது..
இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி மாவட்ட முழுவதும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..