குமரி. லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி.
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய பொன்மனை விஏஓ கைது.
கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் நடத்திய அதிரடி வேட்டையில் பொன்மனை கிராம நிர்வாக அதிகாரி பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இது பற்றிய கூடுதல் விவரங்கள் பின்வருமாறு. டேவிட் மனோகரன் என்பவரது மனைவி பெயர் ராணி. இவரது தாயார் 2 ஏக்கர் 13 சென்று சொத்தை தனது மகள் ராணிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். அந்த உயில் சொத்தை தனது பெயரில் பெயர் மாற்றம் செய்து தர கோரி கடந்த வருடம் 30-12-2023 அன்று ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் நாளது தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளார். இதன் பின்னர் இது பற்றி நேரில் சென்று விசாரித்த போது ஐந்தாயிரம் ரூபாய் தந்தால் மட்டுமே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தருவதாக கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத டேவிட் மனோகரின் மனைவி ராணி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் அவர்களிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இன்று காலை பொன்மனை கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து மேற்படி பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய மனுதாரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது மறைந்து இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் அவர்கள் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.