இன்று சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின் போது இங்கிலாந்தின் உருமாறிய கோவிட் வைரஸை எதிர்த்துப் போராட்டத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை ஆய்வு செய்த அமைச்சர் இதற்காக பிரத்தியேகமாக 50 தீவிர கவனிப்பு படுக்கை வசதிகளை உள்ளடக்கிய 120 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருமாறிய கோவிட் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அதே நேரத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசங்களை அணிந்துகொள்வது, அடிக்கடி கை கழுவுதல், சமூக விலகல் ஆகியவற்றை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்..
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டுமே இதுவரை 5 லட்சம் RT-PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளனர் எனவும் . 29,000 கோவிட் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் மேலும் 10,000 நோயாளிகள் தாமதம் இல்லா (Zero Delay) வார்டில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார் இங்கு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 94.47% பேர் குணமடைந்துள்ளதாகவும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடனும், சுகாதாரக் குழுவின் தடையற்ற முயற்சிகளுடனும், கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று கூறினார்