புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக “நம்மவர்” கமல்ஹாசன் பிறந்தநாளினை முன்னிட்டு இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும் விழாவும், விவசாயிகளுக்கான விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் R.சரவணன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடக மாவட்ட செயலாளர் A.ஹக்கீம், புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் R.சுந்தர், திருமயம் ஒன்றிய செயலாளர் S.திருமேனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு.J.P.ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், வழக்கறிஞர் பிரிவின் மாநில துணை செயலாளர் பொன்.கஜேந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர் K.செந்தில்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராஜசேகர் அவர்கள் விவசாயிகளுக்கு இலவச நாட்டு மாடு கன்றுகளை வழங்கி, விவசாயிகளுக்கான பயிற்சி பட்டறையினை துவக்கிவைத்து பேசுகையில், தற்போதைய கால சூழலில் நேர்மையும் உண்மையும் உள்ள ஒரே தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே என்றும், தமிழகத்திற்கான ஏற்றம்தரும் மாற்றத்தை அவரே தருவார் என்றும் கூறினார். இந்திய நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை காப்போம் என்றும் பேசினார். மக்கள் நலனை மட்டுமே அடிப்படை கொள்கையாக கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக மக்களாகிய நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நகரச் செயலாளர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். விவசாய அணி மத்திய மாவட்ட செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பாளர் ஜெய் பார்த்தீபன், பொறியாளர் அணி முருகவேல், ராம்ராஜ், மாதவன், சக்திவேல், திருமலை, சாதிக், பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேற்கண்ட செய்தியினை தங்களின் நாளிதழில் மற்றும் ஊடகத்தில் வெளிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
அன்புடன்,
ஜெய் பார்த்தீபன்,
மாவட்ட செயலாளர்,
ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு,
மக்கள் நீதி மய்யம்,
புதுக்கோட்டை மத்திய மாவட்டம்.